சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் இணைந்து, கடந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு 2 நாட்கள் மெகா வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து, 26 தனியார் நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 115 காவல் குடும்பத்தினருக்கு, காவல் ஆணையாளர் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து அறிவுரைகள் வழங்கும் CAREER GUIDANCE என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இணைந்து, துவக்கி வைத்தனர்.
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், காவல்ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிப்ளமோ மற்றும் 11ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவினை தேர்ந்தெடுத்தல் குறித்தும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளங்கலையில் எந்த பாடப் பிரிவினை தேர்நதெடுத்தல் குறித்தும், இளங்கலை, முதுகலை மற்றும் தொழில் நுட்ப கல்வி முடித்த வாரிசுகளுக்கு வேலைவாய்ப்புகள் குறித்தும், ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி வழிகாட்டுதல் நிபுணர் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் மூலம் சிறந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) J.லோகநாதன், இணை ஆணையாளர்கள் K.S.நரேந்திரன் நாயர், (தெற்குமண்டலம்), B.சாமூண்டீஸ்வரி, (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் கலந்து கொண்டனர்.