சென்னை இராயப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்கள் கடந்த 06.12.2021 அன்று சென்னை பெருநகர காவல்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால்,உத்தரவின் பேரில்,இன்று (13.12.2021) காலை சென்னை பெருநகர காவல்குழுவினர் சென்னை, இராயப்பேட்டை, ஶ்ரீவெங்கடேஸ்வர மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் முத்தையா கார்டன் பகுதியில் பொதுமக்களுக்கு பல்நோக்கு வாகனம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு, குற்றத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »