சாத்தூர் – சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன் சாத்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பையா சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் இல்லத்தின் முன்பாக மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில் ஏந்தி போராட்டம் நடைபெற்றது. சாத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மத்திய அரசை கண்டித்து கண்டன குரல் எழுப்ப மற்றும் தொண்டர்கள் அனைவரும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
மேற்கு வட்டார துணை தலைவர் ஒத்தையால் முத்துவேல். டெய்லர் மாரியப்பன். நகர துணைத் தலைவர் சின்னப்பன். ஜெயபாலன். ஆறுமுகம்.சாத்தூர் நகர இளைஞரணி தலைவர் சதாம் உசேன். சங்கராபுரம் பரதன். மகளிரணி தலைவி எலிசா மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.