கர்மவீரர் ஐயா. காமராஜரின் 120 வது அவதாரவிழா கொங்குமண்டல வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மகிஷா அரிசி மண்டி வளாகத்தில் மாவட்டத் தலைவர் மகிஷா ரமேஷ்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்தார். திருமுருகன் ரியல் எஸ்டேட் அதிபர் மோகன் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மகளிரணி மாவட்டத்தலைவி ஆனந்தி பூரணகும்பமரியாதை செலுத்தினார். வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் 120 மரக்கன்று வழங்கினார். மாவட்ட செயலாளர் ராமர் வரவேற்றி பேசினார். முகம்மது ஜக்கிரியாமாமா, காவல்துறை விஜயலட்சுமி, கேபிள் மோகன், வின்பாயின்ட் சக்திவேல், தமிழ்நாடு வணிகர்சங்க பாதுகாப்பு பேரவை செயலாளர் தங்கசாமி. அன்னை அருணாசலம். அய்யனார், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மோகன்ஜீ, நெல்லை மாருதி சரத்நயினார், செல்லப்பாண்டியன், சிவராம் மெட்டல்ஸ் பிரதர்ஸ், போன்றவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர், திருமதி. மகிஷாரமேஷ்காளிசுந்தரி, மகளிரணி துணைதலைவி காட்டன்சித்ரா, துணைசெயலாளர் செல்லாத்தாள் அன்னதானத்தை துவங்கி வைத்தனர். சுமார் 3500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்டதுணை தலைவர் விஷ்வக் மணிகண்டன். இணைசெயலாளர் கணேஷ், கவுரவத்தலைவர் மாரியப்பன், பகுதிசெயலாளர்கள் மாரிராஜன், கணேஷ்செல்வகுமார், வெங்காயமணி, கண்ணன், ஆமோஸ், சிவசங்கர், ரமேஷ், சரவணன், ராமலிங்கம், கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றியுரையாற்றினார்.
விழா முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகிஷா ரமேஷ்குமார் காமராஜர் உருவபடம் நினைவு பரிசாக வழங்கினார்