கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டார் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் நேற்று போலீசார்அந்த கடையில் சோதனை செய்தனர் அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த போதை பாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது அப்போது அங்கிருந்து 125 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்