கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் மையங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு இணை செயலாளர் எஸ்.பழனிச்சாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் 90,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி 9,53,000 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவரால்  தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »