கன்னியாகுமரி – முருகன் குன்றம் அருகே லெமூரியா வர்மக்களரி அடிமுறை புதிய தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றியக் கழகச் செயலாளருமான என்.தாமரைபாரதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் லெமூரியா நிறுவனர் ஆசான் செல்வன் மற்றும் லெமூரியா இயக்குனர் ஆசான் திரு மதுரானந்தன், திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் திரு சுதன்மணி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் திரு சுதன் (எ) சுயம்புத்துரை, திமுக நிர்வாகிகள் திரு மோகன்ராஜ், பார்த்தசாரதி உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.