கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி வயது 42 என்பவர் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில் சடலமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கடமலைக்குண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். கண்டமனூர் போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளனவா என விசாரித்து வருகின்றனர்.