கடமலைக்குண்டு ஊராட்சியில் சாக்கடை அருகே தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சியில் குறிஞ்சி ஜவுளி ரெடிமேட்ஸ் அருகே உள்ள பிரிவில் மிக அகலம் மற்றும் ஆழமான சாக்கடை உள்ளது. வருஷநாடு மெயின் ரோட்டிலிருந்து அந்தத் தெருவுக்குள் பிரியும் பொழுது  தடுப்பு சுவர் இல்லாததால் வாகனத்தில் வந்து செல்வோர் நிலை தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. இவ்வழியாக சென்றால் விநாயகர் கோவில், மேகமலை விஏஒ ஆபிஸ் பத்திர பதிவு அலுவலகம், தனியார் மருத்துவமனை என எப்போதும் பல கிராம மக்கள் வந்து செல்லும் பரபரப்பான இந்த தெருவில் வருஷநாடு செல்லும்  மெயின் ரோடு பிரிவில் மேலும் விபத்து நடக்கும் முன், சாக்கடையில் இருபுறமும் தடுப்புச்சுவர் அல்லது கைபிடி சுவர் கட்டிக்கொடுக்க வணிகர்களும் பொதுமக்களும் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »