ஒட்டன்சத்திரம் சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி அமைக்கப்பட்டு ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் , மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் வட்டம் , மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன் வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதை , மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது : 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் வட்டம் , மந்தவாடி ஊராட்சி , சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு ஆண்டு முதல் செயல்படும் என அறிவித்தார்கள் . அதன்படி , மந்தவாடி ஊராட்சி , சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது.


இப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் நடத்தப்படும் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , பி.காம் .. கணிப்பொறி ( பி.எஸ்சி .. ) , கணினி பயன்பாடுகள் ( பி.சி.ஏ . ) . மற்றும் பி.பி.ஏ. , ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தெரிவித்தார்கள்.

ஆய்வின்போது , கூடுதல் ஆட்சியர்  ( வளர்ச்சி ) ச.தினேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சி. இராஜாமணி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர்  ஆர்.சத்தியபுவனா தொப்பம்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் பி.சி.தங்கம் , ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மு.முத்துச்சாமி ,  உட்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »