ஒட்டன்சத்திரத்தில் பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கும் விழா

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் டாக்டர். இராதாகிருஷ்ணன் , வ.உ.சி.சிதம்பரனார் குழு சார்பில் 20 – ம் ஆண்டை முன்னிட்டு டாக்டர். இராதாகிருஷ்ணன் மற்றும் சுதந்திரபோராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ஆகியோர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு சுமார் 1000 பேருக்கு இலவச நோட்டு , பேனா , சாமண்ரி பாக்ஸ், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
 விழாவிற்கு வ.உ.சி பேரவை மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், வாணிய நுகர்வோர் முற்போக்கு இயக்க நிறுவனத்தலைவரும், சமூக ஆர்வலருமான தும்மிச்சம்பட்டி புதூர் ஆர்.சந்திரசேகரன் தலைமை வகித்து , பேசினார் .
 இவ்விழாவில் தலைமை ஆசிரியர் முருகன் , இடைநிலை ஆசிரியர் சாந்தி , உதவி ஆசிரியர் ஆர்.தளசேகர் , தலைமை ஆசிரியர் ஈஸ்வரமூர்த்தி , தும்மிச்சம்பட்டி ரமேஷ் , பகவான் கோயில் தலைவர் வி.செல்வராஜ் , தளபதி பாதை சட்டமன்ற தொகுதி நிருபர் கௌசல்யாதேவி , காந்திநகர் ராமன் , எஸ்.டி.கூரியர்ஸ் பக்கிரிசாமிராஜா , பழனி ஐவகர் கன்சக்சள்ஸ் அரசு ஒப்பந்தகாரர் ஜெ.மனோகரன் , தலைமை காவலர் ரமேஷ் , போக்குவரத்து காவல் தலைமை காவலர் சூர்யா , உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
 முன்னதாக டாக்டர்.இராதாகிருஷ்ணன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆகியோர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து , மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »