சென்னை, இராயப்பேட்டை, பெருமாள் முதலி தெருவில் வசித்து வரும், வெங்கடேசன், வ/56, த/பெ. கணேசன் என்பவர் மதியம் ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த போது, மர்மநபர் ஒருவர் அவருடைய சட்டைப்பையில் இருந்த பணம் ரூ.1 லட்சத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து வெங்கடேசன், D-3 ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
D-3 ஐஸ்அவுஸ் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை செய்து, மேற்படி புகார்தாரரிடம் பணத்தை திருடிச் சென்ற பாஸ்கர், வ/52, த/பெ.ராகவன், ராம்தாஸ்நகர், பழையவண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் பணம் ரூ.1 லட்சம் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட பாஸ்கர் மீது, F-2 எழும்பூர், H-1 வண்ணாரப்பேட்டை, E-3 தேனாம்பேட்டை ஆகிய காவல்நிலையங்களில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட பாஸ்கர் விசாரணைக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.