எம்.கே.பி நகர் பகுதியில் முன் விரோதம் காரணமாக சரித்திரப் பதிவேடு குற்றவாளியை கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது..

சென்னை, வியாசர்பாடி, உதயசூரியன் நகர். 13வது பிளாக், எண்.449 என்ற முகவரியில் வசித்து வரும் ராஜசேகர் (எ) காட்டான்ராஜ், வ/25, த/பெ.ரமேஷ் என்பவர் P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 7 வழக்குகள் உள்ளது. ராஜசேகர்  (எ) காட்டான்ராஜ் நேற்று (28.12.2021) மதியம் சுமார் 2.00 மணியளவில் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் எம்.கே.பிநகர்,முல்லைநகர் அருகில் சென்று கொண்டிருந்த போது, அங்கு  Tata Abe  லோடு வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், மேற்படி ராஜசேகர் (எ) காட்டான்ராஜின் இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளி அவரை கத்தி மற்றும் கோடாரியால் தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ராஜசேகர் (எ) காட்டான்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராஜசேகர் (எ) காட்டான்ராஜ் P-5 எம்.கே.பிநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

    P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.சூர்யா, வ/23, த/பெ.ராஜி, எண்.102, 3வது பிளாக், உதயசூரியன் நகர், வியாசர்பாடி, சென்னை 2.முருகன், வ/24, த/பெ.தாஸ், எண்.90, 3வது தெரு, ஜெ.ஜெ.நகர், வியாசர்பாடி, சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 1 கத்தி,  1 கோடாரி மற்றும் Tata Abe லோடு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யாவின் தந்தை ராஜி என்பவரை கடந்த ஆண்டு மேற்படி ராஜசேகர் (எ) காட்டான்ராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளார். இதன் காரணமாக சூர்யா தனது நண்பர் முருகன் என்பவருடன் சேர்ந்து ராஜசேகர் (எ) காட்டான்ராஜை கத்தியால் தாக்கியது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »