எம்.கே.பி.நகர் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500/- பணம் பறித்துச் சென்ற பழைய குற்றவாளி கைது. பணம் ரூ.500/-பறிமுதல்

சென்னை, உதயசூரியன் நகர், 11வது பிளாக்கில் வசிக்கும் இருதயராஜ், வ/52, த/பெ. மனோகரன் என்பவர் வீட்டினருகே 10வது பிளாக்அருகில் நடந்து செல்லும் போது, ஒருநபர் இருதயராஜை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.500/-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து இருதயராஜ் P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 P-5 எம்.கே.பி.நகர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட யோகேஷ் (எ) காளையா, வ/23, த/பெ.தனசேகர், சுப்ரமணியதெரு, கொடுங்கையூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.500/-மற்றும் 1 ½ அடி நீளமுள்ள 1 கத்திஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் எதிரி யோகேஷ் (எ) காளையா மீது P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் 1 கொலை முயற்சி வழக்கு, 2 வழிப்பறி வழக்குகள் மற்றும் P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்குஎன 4 குற்றவழக்குகள் உள்ள நிலையில், ஏற்கனவே ஒரு தடவை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. கைதுசெய்யப்பட்டஎதிரி யோகேஷ் (எ) காளையா விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »