உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மதுரை மேல அனுப்பானடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டத்தில் ஒரு மாதம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டிமணிமாறன் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல அனுப்பானடியில் அவனியாபுரம் கிழக்குப் பகுதி இளைஞரணி அமைப்பாளர் காளிதாஸ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மாணவ-மாணவிகள் செவிலியர்கள் உட்பட5000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  கலந்து கொண்ட மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி அயன்பாக்ஸ்,பலசரக்கு, உபகரணங்கள்  உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உசிலை சிவா, உசிலை எஸ்பிஎம் சந்திரன், கீழப்புதூர் சரவணன், மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »