சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக,N-1 இராயபுரம்காவல்நிலையஆய்வாளர்தலைமையிலானகாவல்குழுவினருக்குகிடைத்தரகசியதகவலின்பேரில், காவல்குழுவினர்இன்று (02.04.2023) காலை, இராயபுரம், G.M.பேட்டைரோட்டில்வாகனத்தணிக்கையில்இருந்தபோது, அவ்வழியேவந்தகாரைநிறுத்திவிசாரணைசெய்தபோது, காரில்வந்த 4 நபர்களும்முன்னுக்குப்பின்முரணாகபதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், காரில்சோதனைசெய்தபோது, காருக்குள் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில், கஞ்சா கடத்தி வந்த 1.முத்துவேல் வ/30, த/பெ.சங்கர், கண்ணகி நகர் 3வது குறுக்கு தெரு, ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை, 2.கார்த்திக், வ/26, த/பெ.நந்தீஸ்வரன், பெரியார் நகர் 8வது தெரு, மேற்கு தாம்பரம், சென்னை, 3.சத்யா, வ/30, த/பெ.தனசேகர், இராணி அண்ணாநகர், இரும்புலியூர், மேற்கு தாம்பரம், 4.வினோத், வ/25, த/பெ.முத்து, கண்ணகி நகர் 8வது குறுக்கு தெரு, ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 கிலோகஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் நால்வரும் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப டஉள்ளனர்.