இந்தியாவிலேயே தமிழ்நாடு வைரம் மற்றும் தங்க நகைகள் விற்பனை சந்தை முதலிடத்தில் உள்ளது என்று கிஸ்ணா தலைவர் ஹரி கிருஷ்ணா கூறினார் .
சென்னையில் வைரம் மற்றும் தங்க நகைகள் தங்க நகைகள் புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கிருஷ்ணா நிறுவனங்களின் சில்லரை விற்பனை பங்குதாரர்களின் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .
.
ஹரி கிருஷ்ணாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான கன்ஷ்யாம் தோலக்கியா, வணிகக் குழு சந்திப்பில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ஹரி கிருஷ்ணா குழுமத்தின் கிஸ்னா பிராண்ட் 2005 ஆம் ஆண்டு முதல் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்கிறது
நாடு முழுவதும் 3,500 மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களை கொண்ட மிகப்பெரிய வைர நகை பிராண்டாக கிஸ்னா விளங்குகிறது.
குஜராத் சூரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனம்
இதன் சில்லரை விற்பனை
ஹைதராபாத், ஹிசார், அயோத்தி, பரேலி, ராய்ப்பூர், சிலிகுரியில் தொடங்கி
டெல்லி, மும்பை, பெங்களூரு ,சென்னை ஆகிய பெரு நகரங்களில் ஏற்கனவே கால் பதித்திருக்கிறது.வாடிக்கையாளர்களின் குறிப்பறிந்து திருப்திப்படுத்தும் வகையிலும் புதிய வடிவமைப்புகளை உருவாக்கி வணிகத்தை பெருக்கும் நோக்கிலும் சில்லரை விற்பனையாளர்களை சந்தித்து உற்சாகப்படுத்தும் நோக்கிலும் இச்
சந்திப்பு விளங்கும் என்றார்.
மேலும் நிகழ்ச்சியில் இந்த நிறுவனத்தின் இயக்குனர்
பராக் ஷா , கிஸ்னா டயமண்ட் & தங்க நகைகள் நிர்வாக செயல் தலைவர்.எம்.கே. சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.