ஆர்.கே.நகர் பகுதியில் வீண் தகராறு செய்து கட்டையால் தாக்கிய 2 பழைய குற்றவாளிகள் கைது

சென்னை, கொருக்குப்பேட்டை, மீனாம்பாள்நகர் 5வது சந்து என்ற முகவரியில் வசிக்கும் ஜாபர், வ/27, த/பெ.சையது அமீர் என்பவர் நேற்று (02.03.2022) மாலை சுமார் 05.30 மணியளவில், வீட்டினருகே, மீனாம்பாள் நகர், அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே நடந்து சென்ற போது, அங்கு நின்றிருந்த 2 நபர்கள், ஜாபரை வழிமறித்து வீண் தகராறு செய்துள்ளனர். அப்பொழுது ஜாபருக்கும், எதிர்தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த 2 நபர்களும் ஜாபரை தகாத வார்த்தைகளால் பேசி, அருகில் இருந்த கட்டையை எடுத்து ஜாபரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இரத்தக் காயமடைந்த ஜாபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 1.ஆசிப், வ/27, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, J பிளாக், பாரதி நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு, கொருக்குப்பேட்டை, சென்னை, 2.ராபர்ட், வ/28, த/பெ.அந்தோணி, J.J.நகர் 2வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னைஆகிய 2 நபர்களைகைதுசெய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆசிப் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 6 குற்றவழக்குகளும், ராபர்ட் மீது 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 20 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »