சென்னை, தண்டையார்பேட்டை, குமரன் நகர் 4வது தெருவில் வசித்து வரும் ராமமூர்த்தி, வ/46, த/பெ.சீனிவாசன் என்பவர், தண்டையார் பேட்டை, அஜிஸ் நகரிலுள்ள முத்து மாரியம்மன் கோயிலை நிர்வகித்து வருகிறார். ராமமூர்த்தி நேற்று (18.03.2023) காலை சுமார் 06.00 மணியளவில், மேற்படி முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று பார்த்த போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இது குறித்து ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, மேற்படி உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற எதிரி கௌதம் (எ) காக்கா, வ/23, த/பெ.நித்தியானந்தம், சிவாஜிநகர் 1 வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து உண்டியலில் திருடிய பணம் ரூ.1,500/- பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி கௌதம் (எ) காக்கா, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.