அரும்பாக்கம் பகுதியில் கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட மூவர் கைது.

                           

சென்னை, அரும்பாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், எண்.6 என்ற முகவரியில் ஆனந்தகுமார், வ/40, த/பெ. அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். ஆனந்தகுமார் அவரது மனைவி தனலட்சுமி என்பவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 18.12.2021 அன்று இரவு ஆனந்தகுமார் தனது மனைவியிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளார். இந்நிலையில் நேற்று (19.12.2021) காலை ஆனந்தகுமார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் K-8 அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று தலையில் காயத்துடன் வீட்டில் தூக்கில் தொங்கிய ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஆனந்தகுமாரின் மனைவி தனலட்சுமியிடம் விசாரணை செய்ததில், தனது கணவர் ஆனந்தகுமார் அடிக்கடி தகராறு செய்து தாக்கியதால்,தனது தம்பி முருகன் மற்றும் அவரது நண்பர் ஹேம்நாத் ஆகிய இருவரை வீட்டிற்கு வரவழைத்து, ஆனந்தகுமாரை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆனந்த குமார் மயங்கி விழுந்த நிலையில் அவரது கழுத்தை கேபிள் ஒயரால் இறுக்கி கொலை செய்துவிட்டு, அதே ஒயரில் வீட்டின் கூரையில் உள்ள இரும்பு பைப்பில் தூக்கில் தொங்கவிட்டதாகவும் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.தனலட்சுமி, வ/35, க/பெ.ஆனந்தகுமார், எண்.6, டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர், அரும்பாக்கம், சென்னை, அவரது தம்பி 2.முருகன், வ/35, த/பெ. ஜலு, எண்.22, நாவல்பாக்கம் கிராமம், வந்தவாசி தாலுக்கா, திருவண்ணாமலை மாவட்டம் 3.ஹேம்நாத், வ/27, த/பெ.சம்பத், எண்.58, டவுன்ஹால், 3 வதுதெரு, அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »