அயனாவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது. 13.5 கிலோ கஞ்சா பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்ட தன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல்நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் அயனாவரம் பஸ் டிப்போ அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த நபரை விசாரணை செய்த போது, முன்னுக்கப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

 அதன் பேரில், சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பிரதீப்குமார், வ/29, த/பெ.தனசேகர், எண்.73, மேட்டுத்தெரு, அயனாவரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 13.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி பிரதீப்குமார் மீது ஏற்கனவே 1 கஞ்சா வழக்கு உட்பட 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரி பிரதீப் குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »