அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் – தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாட்டில் அறிக்கை…

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாடு  டி .ஜி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை கே .கே ராதாகிருஷ்ணன் ஏற்றினார்.  இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.தில்லைவனம் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார் நகர செயலாளர்   கே.ராஜாராமன் கடந்த காலங்களில் நடைபெற்ற வேலை அறிக்கையாக சமர்ப்பித்தார்.

ஒன்றிய செயலாளர் ஆர் செந்தில்குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் ஆர். எஸ். பாலு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.எம்.குருமூர்த்தி உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநாட்டில் புதிய நகரசெயலாளராக கே.ராஜாராமன் தேர்வு செய்யப்பட்டார்.

கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும். அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி இரவு நேரங்களில் அம்மாபேட்டை பகுதியில் மருத்துவர்கள் இல்லாமல் ஏற்படும் உயிரிழப்பை தடுத்து நிறுத்தவும்.,அம்மாபேட்டை தலைமையிடமாகக் கொண்டு தாலுகாவாக மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாபேட்டையில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் தீ விபத்து ஏற்பட்டால் பெரும் பாதிப்பு. சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவும்.  அம்மாபேட்டை நகர மக்களின் சுடுகாடு சேதமடைந்து உள்ளது உடன் புதிதாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மாபேட்டையில் பழுதடைந்த நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தையும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தையும்உடன் சீரமைக்கவும் அம்மாபேட்டை பேரூராட்சி உள்ள அனைத்து வார்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் மார்க்கெட் கடைகள் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பொதுமக்கள் நலன் கருதி பொது கழிவறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையகட்டுமானப் பணி என்பது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. உடன் கட்டுமானப் பணியை முடித்து மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாபேட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மழைக்காலம் துவங்கியுள்ளதால் கொசு மருந்து தெளிக்கவும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »