கோயமுத்தூர் – அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பச்சாபாளையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் ஆவின் அண்ணா தொழில் சங்கம் சார்பில் கழக கொடியேற்றி, பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் ஏ. முத்துக்குமார், மாநில துணை செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகிக்க, ஆவின் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் எஸ். முருகன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் எம்ஜிஆர் இளங்கோ, தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெயகிருஷ்ணன், தேவராஜ், சிவானந்தம், காளிதாஸ் ,உமா, மகேஸ்வரி, மல்லிகா, பழனியம்மாள், செல்வி, பிஆர். பழனிச்சாமி, பக்தவச்சலம் கருப்புசாமி, மற்றும் பல தொழிலாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.