ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறை 20-21 நிதியாண்டில் இந்திய விளையாட்டு பொருளாதாரத்தில் ரூ.3 ஆயிரம் கோடி பங்களிப்பு!

விளையாட்டு அணிகளுக்கு ஸ்பான்சர் செய்தல், லீக் போட்டிகளை நடத்துதல், விளையாட்டு வீரர்களுக்கான உரிமங்களை வாங்குதல், மேலும் விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு அடிமட்ட அளவில் ஆதரவு அளித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளின் வாயிலாக, இந்த விளையாட்டு சூழலுக்கு, கடந்தாண்டு விளையாட்டு துறைக்கு 20-21 நிதியாண்டில் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறை ரூ.3 ஆயிரம் கோடி பங்களிப்பு செய்துள்ளது. விளையாட்டு துறையின் வளர்ச்சி மற்றும் பங்கேற்பாளர்களின் தீவிரமான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆயோக் 2020 டிசம்பரில் அறிமுகம் செய்த பரிந்துரை அறிக்கையில் [recommendation paper]-, வேகமாக வளர்ந்து வரும் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறையில் உலக அரங்கில் இந்தியா மிகச் சிறந்த பங்கேற்பாளராக இருக்கும் என ஏற்கனவே அதில் தெரிவித்திருந்தது. கூடுதலாக, PwC அளித்த அறிக்கையில் 2024-ல் இந்தியாவில் ஆன்லைன் ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறையின் வருவாய் 3.7பில்லியன் டாலராக என எதிர்பார்க்கப்படுவதாக அதில்  குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் என்பது அசலான விளையாட்டுகளுடன் குறியீட்டு ரீதியான (symbiotic) உறவை பகிர்ந்து கொள்வதாக பரவலாக அறியப்படுகிறது. ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறையானது விளையாட்டுகளில் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகிறது, இதில் பார்வையாளர்கள் அதிக விளையாட்டுகளை நேரடியாக பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர், இறுதியில் இது பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் லீக்குகள் மற்றும் போட்டிகளின் வணிக வளர்ச்சிக்கு உதவுவதாக பல்வேறு ஆய்வுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ், பார்வையாளர்களின் விளையாட்டு நுகர்வு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய விளையாட்டு உள்ளடக்க இணையதளங்களின் வளர்ச்சியை இந்த துறை சந்தித்துள்ளது. தங்கள் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அவர்கள் இணையதளத்தில் நேரத்தை செலவிட்டு தரவுகள் மற்றும் தகவல்களை சேகரித்து, தங்களுக்கான வ்ர்ச்சுவல் குழுக்களை உருவாக்கி கொள்ளும் அதே வேளையில் சிறப்பாக விளையாடவும் உதவுகிறார்கள். இந்த செயல்பாடுகள், விளையாட்டு போட்டிகளை பார்வையிடுதல், விளையாட்டு வீரர்களை குறித்து வாசித்தல், குழுக்களின் திறனை தெரிந்து கொள்ளுதல், தட்ப வெப்ப நிலை மற்றும் மைதானத்தின் சூழல்கள் குறித்து தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்டவையும் அடங்குகின்றன. மேலும், ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் இணையதளங்கள் வாயிலாக, ஹாக்கி, கபடி, கால்பந்து, கைப்பந்து போன்ற கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் விளையாட்டுகளின் வளர்ச்சியும் பிரபலமடைந்து வருவதன் மூலம் இந்த துறையின் முழு ஆற்றலும் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IAMAI-ன் இந்திய டிஜிட்டல் மாநாடு 2022 நிகழ்வில் பேசிய, ட்ரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹர்ஷ் ஜெயின் (Harsh Jain, CEO and Co-founder of Dream Sports) விளையாட்டு துறையை ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறை சிறப்பானதாக உருவாக்கி வருவது குறித்து குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஈடுபாடு, பார்வையாளர்கள் மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில், பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய அளவில் பங்களிப்பாளராக இருக்க முடியும் என்பதையே ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறை காட்டுகிறது” என்றார்.

“ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் மூலமாக, 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் கிரிக்கெட் (போட்டிகள்) மற்றும் கிரிக்கெட் அல்லாத, கபடி, கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, உந்துபந்து போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்பது மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. நுகர்வோருக்கு ஒரு குழுவை உருவாக்கி மக்களுடன் போட்டியிட வாய்ப்பு ஏற்படுவதால், அவர்கள் போட்டிகளைப் பார்க்கிறார்கள் அல்லது அவர்கள் பங்கேற்காத போதும் அவற்றை காண்கின்றனர். இது விளையாட்டின் மீதான ஈடுபாட்டை முற்றிலுமாக மாற்றுகிறது மேலும் விளையாட்டின் மீதான ஈடுபாடு கொள்ளும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் பங்கேற்பில் மிகப் பெரிய மாற்றத்துக்கு வழிவகுப்பதால், இது விளையாட்டை மிக சிறந்த வணிகமயமாக்குவதற்கும் வழி வகுக்கிறது” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறைக்கு முறையான அங்கீகாரத்தையும் கொள்கை அடிப்படையிலான நிர்வாகத்தையும் உருவாக்கி தருவது இந்திய ஃபேன்டஸி ஸ்போர்ட் துறை செயல்பாட்டாளர்கள் புதுமைகளில் கவனம் செலுத்தவும், தெளிவான, கொள்கை அளவிலான ஒழுங்குமுறைகளின் கீழ் தங்களது செயல்பாடுகளை வரையறுத்திக் கொள்வதற்கும் இயலும் என இத்துறையை ஆய்வு செய்த துறை ஆளுமைகள் மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோர் கூட்டாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், அடிமட்ட அளவிலிருந்து ஒரு விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும், உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றுவது என்பதை நோக்கமாக கொண்ட ‘AatmaNirbhar Bharat’ திட்டத்தை நோக்கி அவர்கள் திரும்புவதுடன், அந்த லட்சியத்தை அடைவதற்காக அவர்கள் ஒன்றிணைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »